உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உப்பனாறு வாய்க்காலில் குவிந்துள்ள குப்பைகள்

உப்பனாறு வாய்க்காலில் குவிந்துள்ள குப்பைகள்

கழிவுநீர் செல்வதில் சிக்கல்புதுச்சேரி: உப்பனாறு வாய்க்காலில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பையால், கழிவுநீர் செல்வதில் சிக்கல் உருவாகி உள்ளது. லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் மேட்டு பகுதியில் உருவாகும் வாய்க்கால் கொக்குபார்க், சாரம் வெங்கடேஸ்வரா நகர் வழியாக சென்று ஜீவா நகரில் இருந்து உப்பனாறு வாய்க்காலாக கடலில் கலக்கிறது. 10 அடி அகலத்தில் வரும் வாய்க்கால் ஜீவா நகரில் இருந்து 100 அடி அகலத்திற்கு விரிவடைந்து செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆறுபோல செல்லும் கழிவுநீரில் பொதுமக்கள் குப்பைகளையும் வீசுகின்றனர். இதனால் உப்பனாறு வாய்க்கால் முழுதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே பாலத்தின் கீழ் பகுதியில், பிளாஸ்டிக் குப்பைகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டு தேங்குகிறது. குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி