உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

புதுச்சேரி: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இணைந்து, புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை நேற்று மேற்கொண்டனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் லட்சுமிபதி தலைமை தாங்கினார், சமுதாய கல்லூரி உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியை தாரகேஸ்வரி, ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர்பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். உறுப்பினர்கள் பெருமாள், சீனிவாசன், பிரபாகர், திலகவதி, ஆளவந்தார், பிரதிஷ் இருதயராஜ், ஆரோக்கியசாமி, நூர்சாஹிப் ஆகியோர் மாணவ மாணவிகளுடன் இணைந்து சமூக ஈடுபாடு சேவை திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ