உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் நீதிமன்றத்தில் தங்க நகைகள் கையாடல் வழக்கு; மாஜி சிரஸ்தார் கைது

காரைக்கால் நீதிமன்றத்தில் தங்க நகைகள் கையாடல் வழக்கு; மாஜி சிரஸ்தார் கைது

காரைக்கால் : காரைக்கால் நீதிமன்றத்தில் தங்க நகை கையாடல் வழக்கில் முன்னாள் சிரஸ்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு வழங்குகளில் தொடர்புடைய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மாவட்ட நீதிமன்றத்தில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நகைகள் மாயமானதாக புகார் எழுந்தன.அதையடுத்து, விசாரணையில், நீதிமன்ற கண்காணிப்பு தலைமை சிரஸ்தாராக பணிபுரிந்த புதுச்சேரியை சேர்ந்த குணசேகரன் என்பவர், நகை வைத்திருந்த அறையின் சாவியை வைத்திருந்தார்.இவரை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், புதுச்சேரிக்கு மாற்றம் செய்த நிலையில், அவரது கண்காணிப்பில் இருந்த நகைகள் குறித்த கணக்குகளை நீதிமன்றத்திற்கு அளிக்கவில்லை. இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் சோதனை செய்தபோது, பாதுகாப்பு அறையில் வைத்திருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுக்குறித்த விசாரணைக்கு அழைத்தும் குணசேகரன் ஒத்துழைக்க வில்லை. இதையடுத்து, காரைக்கால் நீதிமன்ற ஊழியர் சுந்தரவடிவேல், அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இந்நிலையில், தலைமறைவாக இருந்த குணசேகரனை நேற்று லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் நீதிபதி மோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார் இதையடுத்து, குணசேகரனை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை