உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் மின்துறைக்கு ரூ. 500 கோடி பாக்கி

அரசு மற்றும் சார்பு நிறுவனங்கள் மின்துறைக்கு ரூ. 500 கோடி பாக்கி

புதுச்சேரி: அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மின்துறைக்கு 500 கோடிக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து, மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் பால சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரியில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலம், 500 கோடிக்கு மேல் மின்துறைக்கு செலுத்த வேண்டியுள்ளது. மத்திய அரசு சூரிய சக்தி மின்சாரம் நடுத்தர மக்கள் வீட்டு உபயோகத்திற்கு மானியத்துடன் வழங்கி வருகிறது. அதே போல, வியாபாரிகளுக்கும் இந்த திட்டம் வழங்க வேண்டும். புதிய தொழில் நுட்பம் கருவிகள் இருந்தும், மின் திருட்டை தடுக்க மின்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. மின்துறையில், இடஒதுக்கீடு முறையை பின்பற்றி காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை