சுகாதாரத்துறை முறைகேடுகள் கண்டித்து தொடர் போராட்டம் அரசு ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சுகாதரத்துறையில் உள்ள முறைகேடுகள் மீது விசாணைக்கு வரும் வரை தொடர் போராட்டம் நடத்துவது என அரசு ஊழியர் சம்மேளனம் கவுரவத் தலைவர் பிரேமதாசன் தெரிவித்துள்ளார்.அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் சுகாதார ஊழியர் சம்மேளனம் கூட்டம் சம்ளேனம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்தில் சம்ளேனம் கவுரத் தலைவர் தலைமை தாங்கி, பேசியதாவது:சுகாதாரத்துறையில் பல பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் நோய் தொற்று அபாயங்களுடன் பணியாற்றி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை இயக்குனர் நிறைவேற்றாத வகையில் சில அதிகாரிகள் அதற்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். சுகாதார உதவியாளர் பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு, தகுதி இல்லாத டிப்ளமோ மூலம் பணியில் சேர்ந்தவர் மீது நடவடிக்கை, தரமற்ற மருந்துகள். தரமற்ற எல்.சி.டி. டி.வி.. தேவைக்கு அதிகமான வாடகை வண்டிகள், செயல்படுத்தாத திட்டங்களை செயல்படுத்தியதாக ஆவணங்கள் தயார் செய்து கோடிக்கணக்கில் மோசடி செய்தவர்கள் மீதும், மேற்கூறிய அனைத்து முறைகேடுகள் மீது விசாரணைக்கு உத்தரவிடும் வரை, நான்கு பிராந்தியங்களிலும் ஊழியர்களை திரட்டி, போராட்டம் நடத்த அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் சுகாதார ஊழியர் சம்மேளனம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.