உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கரடு முரடான விளையாட்டு திடலால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி

கரடு முரடான விளையாட்டு திடலால் அரசு பள்ளி மாணவர்கள் அவதி

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கரடு முரடான விளையாட்டு திடலால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்கள் பள்ளி திடலில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர்.இந்த விளையாட்டு திடலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு திடல் போதிய பாரமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு திடலை சுற்றி செடி, கொடிகள் மரங்கள் முளைத்து திடல் சுருங்கி உள்ளது.இதனால் முழுமையான விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. குருகிய விளையாட்டு திடலில் மாணவர்கள் விளையாடும் போது பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் காரணமாக அச்சமடைகின்றனர்.விளையாட்டு திடலை சுற்றி செடி, கொடி, புற்கள் மண்டியுள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆடு, மாடுகளை விட்டு மேய்கின்றனர். இதனால் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.எனவே, விளையாட்டு திடலை சுற்றி முறையான மதில் சுவர் அமைத்து, பராமரிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை