கலவை கல்லுாரி அரசு பள்ளி கவர்னர், முதல்வர் திறந்து வைப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த கலவை கல்லுாரி அரசு மேல்நிலைப்பள்ளியை, 5 கோடி மதிப்பீட்டில், புதிப்பிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது.புதுச்சேரி மிஷன் வீதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 5 கோடி மதிப்பீட்டில் புதிப்பிக்கப் பட்டது. 1875ம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கட்டப்பட்ட 150 ஆண்டு பராம்பரியமிக்க, கலவை கல்லுாரி அரசு மேல்நிலைப்பள்ளி (கலவை சுப்புராய செட்டியார் கல்லுாரி) நேற்று திறக்கப்பட்டது.புதிப்பிக்கப்பட்ட கல்லுாரி கட்டட வகுப்பறைகள் மற்றும் கட்டடத்தின் கல்வெட்டை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வரவேற்றார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, பிரான்ஸ் நாட்டின் கவுன்சில் ஜெனரல் எட்டின் ரொனால்ட், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிகழ்ச்சியில், ராமலிங்கம் எம்.எல்.ஏ., கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, அரசு செயலர் ருத்ரகவுடு உட்பட கல்வித்துறை அதிகாரிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டம் அதிகாரிகள், கலவை கல்லுாரி, ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.