புதிய சட்டசபைக்கு கவர்னர் ஒப்புதல் சபாநாயகர் செல்வம் தகவல்
புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கட்டுவதிற்கான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளதாக சபாநாயகர் செல்வம் தெரிவித்தார். தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் பகுதியில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டசபை வளாகம் ரூ. 600 மதிப்பில் கட்டப்படும் என கடந்த சட்டசபை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கான கோப்புகளும் தயார் செய்யப்பட்டது. இந்நிலையில், சபாநாயகர் செல்வம் கூறுகையில்; தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டசபை வளாகம் ரூ. 600 கோடியில் கட்டுவதிற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால், சட்டசபை கட்டுவதிற்கான கோப்பு தலைமை செயலகத்தில் கடந்த ஒரு மாதமாக ஆய்வில் உள்ளது என கூறினார்.