கவர்னர், முதல்வர் ஆயுதபூஜை வாழ்த்து
புதுச்சேரி : சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையையொட்டி கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தள்ளனர். கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தொழிலையும், கருவியையும் வணங்கி, நம் வாழ்க்கையை செழிப்பாக்கும் இந்த பாரம்பரிய விழா நம் அனைவரது வாழ்விலும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், ஒற்றுமை உணர்வையும் மேம்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மனித வாழ்விற்கு அடிப்படையாக கருதப்படும் கல்விக்கும், தொழிலுக்கும் உறுதுணையாக இருக்கின்ற உபகரணங்களை வழிபடுவதற்கான நன்னாளாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திகழ்கிறது. இந்த பூஜைகள் நம் வாழ்வில் புதிய ஆற்றலையும், நம்பிக்கையையும் கொண்டு வரட்டும் என, தெரிவித்துள்ளார். இதேபோன்று அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., தலைவர் வைத்திலிங்கம், பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அரசு கொறடா ஆறுமுகம், அ.தி.மு.க., மாநில செய லாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக் தி சேகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.