உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர், முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

கவர்னர், முதல்வர் சுதந்திர தின வாழ்த்து

புதுச்சேரி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி கவர்னர், முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் நாம் சுதந்திரம் அடைந்தோம். அவர்களுடைய தியாகங்களை நினைத்து போற்றுவது நமது கடமை. இந்திய தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காத்திட நாம் இந்த நாளில் உறுதி ஏற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் ரங்கசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்த இனிய நாளில், உலகிற்கு அன்பையும், நம்பிக்கையையும் தரும் இந்தியாவின் இறையாண்மையை உயர்த்திப்பிடிக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், எதிர்க்கட்சி தலைவர் சிவா, எம்.பி.,க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., தலைவர் ராமலிங்கம், அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன், அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை