உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கவர்னர், முதல்வர் மரியாதை

கவர்னர், முதல்வர் மரியாதை

புதுச்சேரி; புதுச்சேரி அரசு சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, கடற்கரை சாலையில் உள்ள அவரது உருவ சிலைக்கு, கவர்னர் கைலாஷ்நாதன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், ரமேஷ், லட்சுமிகாந்தன், கலெக்டர் குலோத்துங்கன், தலைமை செயலர் சரத் சவுத்கான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

காங்.,

காங்., சார்பில் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, வைசியாள் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கி, காந்தியின் திருவுருவ படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.இதில், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், காங்., நிர்வாகிகள் தனசு, இளைஞர் அணி தலைவர் ஆனந்தபாபு, சேவாதள தலைவர் குணசேகரன், மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

என்.ஆர்.காங்.,

புதுச்சேரி என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,முதல்வர் ரங்கசாமி காந்திபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார். துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ., க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி