உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கொடிநாளுக்கு நிதி அளித்தவர்கள் கவர்னர் கவுரவிப்பு

 கொடிநாளுக்கு நிதி அளித்தவர்கள் கவர்னர் கவுரவிப்பு

புதுச்சேரி: மக்கள் மாளிகையில் கொடி நாள் விழா நேற்று நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் கடந்தாண்டு கொடி நாள் நிதிக்கு அதிக பங்களிப்பு செய்த அரசு துறைகள், நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். விழாவில் தலைமைச் செயலர் சரத் சவுகான், முன்னாள் படை வீரர்கள்துறைச் செயலர் கேசவன், கலெக்டர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில், கவர்னர் பேசுகையில், முப்படை வீரர்களின் தியாகம் போற்றுதலுக்கு உரியது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்யும் படை வீரர்களின் இறுதிச்சடங்கு வரும் காலங்களில் அரசு மரியாதையுடன் நடை பெற வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ