உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழிப்புணர்வு ஊர்வலம்: கவர்னர் துவக்கி வைப்பு

விழிப்புணர்வு ஊர்வலம்: கவர்னர் துவக்கி வைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். புதுச்சேரி அரசு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை மற்றும் மத்திய அரசின் பிட் இந்தியா, மற்றும் கேலோ இந்தியா இயங்கங்கள் சார்பில், சண்டேஸ் ஆன் சைக்கிள்ஸ் உடற்பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று நடந்தது. இதையொட்டி, சைக்கிள் ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை செயலர் கிருஷ்ணமோகன், விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் துறை அதிகாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி