உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிரபல கோவில் ஊழியர்களுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி ; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

பிரபல கோவில் ஊழியர்களுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி ; விசாரணைக்கு கவர்னர் உத்தரவு

புதுச்சேரி: பிரபல கோவிலில் மட்டன், சிக்கன் வழங்கியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.புதுச்சேரி நகர பகுதியில் பிரபல கோவிலில் உள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி இக்கோவிலில் பணியாற்றும் ஊழியர்கள், நிர்வாகத்திடம், துணிமணிகள், பட்டாசுகள் கேட்டனர்.அவர்களை குஷிப்படுத்த நினைத்த கோவில் நிர்வாகம், மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் புத்தாடை வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.புனிதமான கோவிலில் மட்டன், சிக்கன் பிரியாணி வழங்கியது தற்போது சர்ச்சையை எழுப்பிந்துள்ளது. இது தொடர்பாக கவர்னருக்கு ஆதாரத்துடன் புகார் சென்றுள்ளது. இது தொடர்பாக கவர்னரும் விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.இதேபோல் அக்கோவிலில் இருந்த சில பொருட்களும் களவாடப்பட்டு யாருக்கும் தெரியாமல் விற்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை