உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரியாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்

 அரியாங்குப்பத்தில் கிராம சபை கூட்டம்

அரியாங்குப்பம்: குடியரசு தினத்தையொட்டி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட 14 பஞ்சாயத்துக்களில், கிராம சபைக் கூட்டம் நடந்தது. மணவெளி கிராமம், புருேஷாத்தமன் சமுதாய நலக்கூடத்தில் நேற்று காலை நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக உள்ளாட்சித் துறை துணை இயக்குனர் பாஸ்கர், கண்காணிப்பாளர் கல்யாணி கலந்து கொண்டனர். மேலும், அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்து, பி.சி.பி., நகர் சமுதாய நலக்கூடம், ராதாகிருஷ்ணன் நகர் பஞ்சாயத்து, ஆர்.கே., நகர், வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் வளாகம், நோணாங்குப்பம் கிராம பஞ்சாயத்து, ஆண்டியார்பாளையம் மாரியம்மன் கோவில் அருகில், நல்லவாடு சமுதாய நலக்கூடம், டி.என்., பாளையம் சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட 14 பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடந்தன. அதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பிரச்னைகள் குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !