மணக்குள விநாயகர் கல்லுாரியில் பிரமாண்ட திரையிடல் பயிலரங்கு
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஊடகவியல் துறை சார்பில், 'பிரமாண்ட திரையிடல்' என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச்செயலாளர் வேலாயுதம், கல்லுாரி இயக்குநர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி ஆகியோர் துவக்கி வைத்தனர். மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்தி பேசினார். தயாரிப்பாளர் கனிசியஸ் ஆண்ட்ரூ, நிர்வாக இயக்குநர் செல்வராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படக் காட்சிகள் திரையிடப்பட்டன. அக்காட்சிகளில் வெளிப்படும் திரைப்பட உருவாக்கத்திற்கு தேவையான படம் பிடிக்கும் கருவி, ஒலிப்பதிவு, நவீன திரைப்படக் காட்சிப்பதிவு முறைகள், திரைப்பட வகைகள், திரைப்படப் பகுப்பாய்வு, பார்வையாளர்களின் உணர்வுகளை கையாளும் கேமரா கோணங்களும் ஒளியமைப்பும் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்தும், காட்சி நுட்பங்களை கதை சொல்லுக்கான மொழியாக மாற்றுவது எப்படி என்பதையும் மாணவர்கள் கற்றுக் கொண்டனர். கல்லுாரியின் அனைத்து துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊடகவியல் துறைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.