உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் குறை தீர்வு முகாம்

போலீஸ் ஸ்டேஷன்களில் மக்கள் குறை தீர்வு முகாம்

புதுச்சேரி : பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த மக்கள் குறை தீர்வு முகாமில் எஸ்.பி., வம்சித ரெட்டி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதுச்சேரியில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் வாரம்தோறும் சனிக்கிழமை மக்கள் குறை தீர்வு முகாம் நடந்து வருகிறது. அதன்படி, முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த முகாமில், சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா மற்றும் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டுகுறைகளை கேட்டறிந்தனர். அதில், ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குப்படுத்த வேண்டுமென பொதுமக்க் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, சீனியர் எஸ்.பி., பொதுமக்கள் தெரிவித்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.இதேபோல், பெரியக்கடை போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்தில், எஸ்.பி., வம்சித ரெட்டி கலந்து கொண்டு, குறைகளை கேட்டறிந்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.உருளையன்பேட்டை, ரெட்டியார்பாளையம், ஓதியஞ்சாலை, கோரிமேடு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம், திருபுவனைஉள்ளிட்ட அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் மக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை