இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் நாளை குறைதீர்வு முகாம்
புதுச்சேரி: தொழிலாளர் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், நாளை (11ம் தேதி) குறை தீர்வு முகாம் நடக்கிறது. புதுச்சேரி தொழிலாளர்கள் அரசு காப்பீட்டுக்கழக மண்டல அலுவலகத்தில், ஒவ்வொரு மாதம் 2வது புதன் கிழமையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, நாளை (11ம் தேதி) மதியம் 3:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை குறைதீர்வு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில், தொழிலாளர்கள், பயனாளிகள், தொழில் முனைவோர்கள் தங்கள் இ.எஸ்.ஐ., தொடர்பான கோரிக்கைகளை, கடிதம் மூலம், ஆணவங்களுடன் சமர்ப்பிக்கலாம். உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணப்படும். இவ்வாறு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்.