குராஷ் தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி : புதுச்சேரி மாநில குராஷ் தற்காப்பு கலை மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் வில்லியனுார் பொறையூர் ஆதித்யா வித்யாஸ்ரம் பள்ளியில் நடந்தது.போட்டிகளை கல்வித்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன் தொடங்கி வைத்தார். போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த குராஷ் தற்காப்பு கலை பயிற்சி பெற்ற வீரர் வீராங்கணைகள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஆதித்யா பள்ளி குழுமத் தலைவர் அசோக் ஆனந்த், ஆரோவில் இசையம்பலம் பள்ளி தாளாளர் சஞ்சீவீ ரங்கநாதன் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.விழாவில் ஜூடோ சங்க முன்னாள் பொதுச்செயலாளர் பிரதீப்குமார் ஜெயின், மூத்த பயிற்சியாளர்கள் ரகுராமன், பாலமுரளி, பயிற்சியாளர்கள் முனுசாமி, இளையநம்பி, குணசேகரன், மகேஸ்வரர், பச்சையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில குராஷ் தற்காப்பு கலை சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.