மேலும் செய்திகள்
கோரக்க சித்தர் ஜீவ சமாதியில் வழிபாடு
01-Feb-2026
திருக்கனுார்: சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், குரு பூஜை விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்தர் ஜீவ சமாதி அடைந்த 219ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி, அன்று காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கலச பூஜையுடன் கூடிய அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் திருத்தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
01-Feb-2026