உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ஏரிப்பாக்கம் - நத்தமேடு புதுநகரைச் சேர்ந்தவர் அபிமன்யூ, 61. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக மடுகரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், குப்புசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று, ஆய்வு செய்தனர். அதில் தடைசெய்யப்பட்ட ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அபிமன்யூ மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை