மேலும் செய்திகள்
கம்பன் அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
07-Sep-2025
நெட்டப்பாக்கம் : பள்ளி அருகில் குட்கா பொருட்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர். நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள கடையில் ஆய்வு செய்தனர். அப்போது பெட்டி கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த நெட்டப்பாக்கம் மெயின் ரோட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு, 46; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
07-Sep-2025