குட்கா விற்றவர் கைது
அரியாங்குப்பம்: பள்ளி அருகில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பம் – நல்லவாடு சாலை தனியார் பள்ளி அருகில் பெட்டிக்கடையில் குட்கா விற்பதாக தவளக்குப்பம் போலீசாருக்கு இன்று (நவ.,14) தகவல் வந்தது. அதையடுத்து போலீசார் அந்த கடையை சோதனை செய்தனர். அதில், குட்கா, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, உரிமையாளர் பசுபதி, 63; என்பவரை கைது செய்தனர்.