உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்

 கைவினைப் பொருட்கள் கண்காட்சி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி கைவினைப் பொருட்கள் கவுன்சில் மற்றும் இண்டாக் அமைப்பு சார்பில், 'புது வசந்தம்' கைவினைப் பொருட்கள் கண்காட்சி கடற்கரை சாலை காந்தி திடல், கண்காட்சி வளாகத்தில் நேற்று நடந்தது. கண்காட்சியை டாக்டர் வித்யா ராம்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். மத்திய அரசின் கைவினைப் பொருட்கள் சேவை மைய உதவி இயக்குநர் ரூப் சந்தர், டெரகோட்டா கலைஞர் பத்மஸ்ரீ முனுசாமி, பொருளாளர் ஜோதி வர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கண்காட்சியில் நாடு முழுதும் இருந்து 40க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் பங்கேற்றனர். இதில், பாரம்பரிய கைத்தறி ஆடைகள் மற்றும் கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாலையில் கைவினை கலைஞர்களின் பயிற்சிப் பட்டறை நடக் கிறது. நேற்று துவங்கிய பொருட்கள் கண்காட்சி நாளை (22ம் தேதி) வரை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை