உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுகாதாரத் துறை, தாசில்தார் போட்டி தேர்வு ஒத்திவைப்பு

சுகாதாரத் துறை, தாசில்தார் போட்டி தேர்வு ஒத்திவைப்பு

புதுச்சேரி: சுகாதார துறை, வருவாய் துறை பணியிடங்களுக்கான போட்டி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி சுகாதார துறையில் ஏ.என்.எம்., பார்மாசிஸ்ட், இ.சி.ஜி., டெக்னீஷியன், தியேட்டர் அசிஸ்டண்ட், ெஹல்த் அசிஸ்டண்ட் பணிகளுக்கான தேர்வு வரும் 13ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இதேபோல், வருவாய்த் துறையில் தாசில்தார் பணியிடங்களுக்கான தேர்வு வரும் 20ம் தேதி நடக்க இருந்தது. இந்த இரண்டு துறைகளின் போட்டித் தேர்வுகளும் நிர்வாக காரணங்களுக்காக தற்போது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என, நிர்வாக சீர்த்திருத் துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை