மேலும் செய்திகள்
சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
05-Sep-2025
இதய செயல்பாட்டை அறிய கே.எம்.சி.எச்.ல் பரிசோதனை
26-Aug-2025
புதுச்சேரி : லாஸ்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பெண்களுக்கான சுகாதாரத் திருவிழா நடந்தது. பெண் சுகாதார மேற்பார்வையாளர் ராதா முத்து வரவேற்றார். மருத்துவ அதிகாரி கவுசிகா, செவிலிய அதிகாரி புளோரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, அவர், ரத்த அழுத்தம் மற்றும் இரும்பு சத்து பரிசோதனை செய்து கொண்டார். பொறுப்பு மருத்துவ அதிகாரி பத்மினி தலைமை தாங்கி பெண்களுக்கான சுகாதாரம், மார்பக மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய் குறித்து விளக்கினார். டாக்டர் யுவராஜ் முகாமின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கினார். முகாமில், பொது சுகாதார சேவைகள், ரத்த அழுத்தம், ரத்த சோகை, காச நோய் பரிசோதனை, சிறப்பு மகப்பேறு, பெண்களுக்கான சிறப்பு மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனை, குழந்தைகளுக்கான தடுப்பூசி, மனநலம் உடல் பருமன் பரிசோதனை ஆகியவைகள் செய்யப்பட்டது. செவிலிய அதிகாரி ராஜீ நன்றி கூறினார்.
05-Sep-2025
26-Aug-2025