இதய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி : உலக இதய தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு நல வழித்துறை, வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.சுகாதார மேற்பார்வையாளர் சாய்ரா பானு வரவேற்றார்.மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கி, பேசுகையில், 'நாம் எப்போதும் மகிழ்ச்சியுடனும், சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். புகை மற்றும் மது பழக்கம், துரித உணவுகள் சாப்பிடுதல், ஒழுங்கற்ற வேலை நேரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதை தடுக்க கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். உடற்பயிற்சி, யோகா செய்து உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் சிறுதானிய ஆரோக்கிய உணவுகளை சாப்பிட வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை முழுமையான உடல் பரிசோதனை செய்ய வேண்டும். இரவில் எட்டு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம் வேண்டும்' என்றார்.ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.