உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாரிசுதாரர்கள் பணி நியமன முறைகேடு அதிகாரிகள் மீது போலீசில் புகார்

வாரிசுதாரர்கள் பணி நியமன முறைகேடு அதிகாரிகள் மீது போலீசில் புகார்

புதுச்சேரி : சுகாதார துறையில் வாரிசுதாரர்கள் பணி நியமனத்தில் முறைகேடு மற்றும் விதிமீறல்களுக்கு காரணமாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.புதுச்சேரி சுகாதார துறையில் வாரிசுதாரர்கள் பணி நியமனம் தொடர்பாக, கடந்த 2018ம் ஆண்டு வரை பெற்றப்பட்ட விண்ணப்பங்கள் மூலம், 88 பேர் பணி நியமனத்தில்முறைகேடுநடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக, வாரிசுதாரர்கள் சங்கத்தின் சார்பில், போராட்டம் நடத்தி வருகின்றனர்.சுகாதாரத்துறை வாரிசுதாரர்கள் நலச் சங்கத்தின் சார்பில், ஊழியர்கள் நியமான முறையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி, சுகாதாரத்துறை இயக்குனரகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, சங்க ஒருங்கிணைப்பாளர் டேவிட், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், சம்மேளத்தின் கவுரவ தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், ஊழியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பேரணியாக சென்று, பெரியக்கடை போலீசில் புகார் அளித்தனர்.அதில், வாரிசுதாரர்களின் பணி நியமனத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முறைகேடுகள் செய்துள்ளனர்.நியமனத்தில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது. எனவே முறைகேடுகள் செய்த அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை