உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரிக்கு ரயிலில் வந்து குவியும் ஹெல்மெட்டுகள்

புதுச்சேரிக்கு ரயிலில் வந்து குவியும் ஹெல்மெட்டுகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஹெல்மெட் அணிவது கட்டாயமானதால் வெளி மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் ஏராளமான ஹெல்மெட்டுகளை சாலையோர விற்பனைக்கு வியாபாரிகள் கொண்டு வந்துள்ளனர்.புதுச்சேரி சின்ன மாநிலம். இதன் மக்கள் தொகை 15 லட்சம். ஆனால் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கையோ 10 லட்சத்தை தொடுகிறது. இதுமட்டுமின்றி புதுச்சேரியில் நடக்கும் பெரும்பாலான சாலை விபத்துகளில் தலையில் அடிப்பட்டு இறப்போர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.இதனை தடுப்பதற்காக ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை பலமுறை கொண்டு வரப்பட்டது. அரசியல் கட்சிகளின் அழுத்தத்தால் தள்ளிக்கொண்டே போனது. அதை தொடர்ந்து புதுச்சேரி கவர்னர் கைலாஷ் நாதன் உடனடியாக ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டார். அதையொட்டி கடந்த 12ம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமானது.இதனை குறிவைத்து உ.பி. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் புதுச்சேரி சாலையோரங்களில் ஹெல்மெட்டுகளை விற்பனை செய்வதற்காக, ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து ரயில் மூலம் பார்சலில் ஹெல்மெட்டுகளை கொண்டு வந்து குவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் புதுச்சேரி வந்த திருப்பதி மற்றும் கச்சக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்களில் பல்லாயிரக்கணக்கான ஹெல்மெட்டுகள் பார்சல் மூலம் புதுச்சேரி ரயில் நிலையத்தில் வந்து இறங்கி வருகின்றன.இதனை விற்பதற்காக புதுச்சேரிக்கு வெளிமாநில வியாபாரிகள் ஏராளமானோர் வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram Moorthy
ஜன 19, 2025 08:22

ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் அதில் தரமான ஹெல்மெட் விற்பது ரொம்ப முக்கியம் சாலை ஓரங்களில் விற்பனை இருக்கும் ஹெல்மெட்கள் தரமானத என்பதை அரசு அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை