உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பாரம்பரிய அருங்காட்சியகம் திறப்பு

 பாரம்பரிய அருங்காட்சியகம் திறப்பு

காரைக்கால்: காரைக்கால் நிரவி பகுதியில் உலக பாரம்பரிய தினத்தையொட்டி, அருங்காட்சியகம் திறப்பு விழா நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்., 18ம் தேதி சர்வதேச பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம், கலாசார மற்றும் இயற்கை பாரம்பரியங்களை பாதுகாப்பது மற்றும் இயற்கை வளங்களை எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாப்பதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நிரவி கிராமம், மேலராஜா வீதியில் வசிக்கும் அஸ்ரப் அலி தனது இல்லத்தையே அருங்காட்சியகமாக மாற்றினார். 'காரைக்கால் பாரம்பரிய மையம்' என்ற பெயரில் உலக பாரம்பரிய மையத்தை கலை மற்றும் பண்பாட்டு துறையின் தகவல் அதிகாரி திருமேணி செல்வம், வேளாண் கல்லுாரி போராசிரியர் ஆனந்தகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கலை மற்றும் பண்பாட்டு துறை உதவியாளர் கென்னடி தாஸ், வினோத், ஸ்ரீதர், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ