உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காதலர் தினத்திற்கு எதிர்ப்பு; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 காதலர் தினத்திற்கு எதிர்ப்பு; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

காதலர் தின விழா கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் இந்து முன்னணியினர் வாழ்த்து அட்டைகளை எரித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அண்ணா சாலை, வள்ளலார் சாலை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மொபைல் போன் கடைகள், துணிக்கடைகள், பேக்கரிகளில் காதலர் தினத்தை வரவேற்கும் விதமாக அறிவிப்புகள் வரவேற்பு வளையங்கள் வைத்திருந்தன. அதனைத் கண்டித்து காதலர் தினத்தை கொண்டாடும் வணிக நிறுவனங்களால் கலாசார சீரழிவு ஏற்படுகிறது எனக் கூறி, புதுச்சேரி இந்து முன்னணியினர் கோட்ட செயலாளர் முருகையன் தலைமையில் சம்பந்தப்பட்ட கடைகளில் முன், காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையொட்டி, கடைகளில் இருந்த காதலர் தின விளம்பரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை