உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நுாறு நாள் பணி துவக்கி வைப்பு

நுாறு நாள் பணி துவக்கி வைப்பு

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் தொகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் வாய்கால் துார்வாரும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார்.அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த ஏரிப்பாக்கம், கரையாம்புத்துார், கரியமாணிக்கம், மடுகரை, மணமேடு, நெட்டப்பாக்கம், சூரமங்கலம், கல்மண்டபம் பஞ்சாயத்துகளில் ரூ. 3கோடி செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஏரி, குளம், உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் துார்வாரப்பட உள்ளன. இதற்கான பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திக்கேசன், உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சம்பத், பணி ஆய்வாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை