கணவர் மாயம்: மனைவி புகார்
புதுச்சேரி : கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.புதுச்சேரி, தர்மாபுரி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் விவேக்பாரதி, 30; துபாயில் ஓட்டலில் சூப்பர்வைசராக பணி செய்து வந்தார். இவர் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் கடந்த அக்., 2ம் தேதி வீட்டிற்கு வந்தார். அதே மாதம் 25ம் தேதி துபாய் செல்வதற்காக டிக்கெட் போட்டு சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.அங்கு விமானம் ரத்து செய்யப்பட்டதால், வீட்டிற்கு வந்தார். மீண்டும் கடந்த 6ம் தேதி துபாய் செல்வதற்காக நகையை அடமானம் வைக்க விவேக்பாரதி ஆதார்கார்டு எடுத்துக் கொண்டு அன்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.பின் வீட்டிற்கு வருவதற்கு இரவு 9:00 மணி ஆகும் என, மனைவியிடம் மொபைல் போனில் கூறினார். ஆனால் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஜெயஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.