உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

 மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை

புதுச்சேரி: மதுகுடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். தருமாபுரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம், 57; மது குடிக்கும் பழக்கமுடையவர். மது குடிக்க தனது மனைவி பத்மாவதியிடம் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுத்ததால், மனமுடைந்த அவர் கடந்த, 21ம் தேதி வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை