உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கீழே அடிப்படை வசதிகளை செய்து தருவேன்: த.வெ.க., வேட்பாளர் ராமு உறுதி

கீழே அடிப்படை வசதிகளை செய்து தருவேன்: த.வெ.க., வேட்பாளர் ராமு உறுதி

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதி த.வெ.க., வேட்பாளர் ராமு, நேற்று தவளக்குப்பம் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளிடம் சென்று விசில் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். வேட்பாளர் ராமு கூறுகையில், 'மணவெளி தொகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. நல்ல குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தவளக்குப்பத்தில் குறைந்த மின்ழுத்தம் இருந்து வருதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க ஏற்பாடு செய்வேன். என்னை வெற்றிப்பெற செய்தால், இந்த பிரச்னையை தீர்த்து வைப்பேன். கடலுார் சாலை என்.ஆர்.நகர்., தவளக்குப்பத்தில், பயணிகள் நிழற்குடை அமைத்து தருவேன். மணவெளி தொகுதியில் அனைத்து இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வேன். கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பேன் என, வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ