தொண்டனாக பணியாற்றுவேன் சாய் சரவணன்குமார் பேட்டி
புதுச்சேரி:பிரதமர் மோடி கூறினால், நான் பா.ஜ., தொண்டனாகவும் பணியாற்றுவேன் என, சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது கோரிக்கைக்கு அமைச்சர் நமச்சிவாயம் நல்ல முடிவை எடுப்பார் என நினைத்தேன். ஆனால், நான் அமைச்சர் பதவி இல்லாத விரக்தியில் பேசுவதாக கூறியுள்ளார். அமைச்சர் பதவி, என் அப்பன் வீட்டு பதவி கிடையாது. அது மக்களுக்காக பணி செய்யும் ஒரு சேவை. பிரதமர் மோடி கூறினால், பா.ஜ., தொண்டராக பணியாற்ற கடமைப்பட்டுள்ளேன். சாதாரண 'லேடி'யை நிறுத்தி, மோடி பெயரை கூறியிருந்தாலே வெற்றி பெற்று, எம்.பி.,யாகி, மத்திய அமைச்சராகி புதுச்சேரியை ஒளிர வைத்திருக்கலாம். ஆனால், தாங்கள் மக்கள் செல்வாக்கு உள்ளதாக கூறி, 30 தொகுதிகளிலும் குறைந்த ஓட்டுகள் வாங்கி, கட்சியை தோல்வியடைய செய்தீர்கள். பா.ஜ.,வை வளர்த்து, ஆட்சியில் அமர வைத்து விட்டு, அமைச்சராகி என்னை அந்த வார்த்தை கூறியிருந்தால், நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, தாங்கள் எனக்கு பதில் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.