உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தற்கொலைக்கு முயன்ற முதியவரை காப்பாற்றிய ஐ.ஜி.,க்கு பாராட்டு

தற்கொலைக்கு முயன்ற முதியவரை காப்பாற்றிய ஐ.ஜி.,க்கு பாராட்டு

புதுச்சேரி; கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி முதியவரை ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா மீட்டு காப்பாற்றினார். புதுச்சேரி ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, நேற்று மாலை 6:30 மணிக்கு கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டர். அப்போது, சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் எதிரில், விநாயகர் சிலைகள் கரைக்கும் பகுதியில், பாறைகளுக்கு இடையே முதியவர் ஒருவர் இறங்கி கடலில் குதிக்க முயன்றார்.அதனைக் கண்ட ஐ.ஜி., உடனே அருகில் இருந்த போலீசாரை அழைத்து முதியவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வரச் செய்தார்.விசாரணையில், முதியவர் செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலுார், அகதிஸ்வரர் நகரைச் சேர்ந்த சந்திரகுமார்,74; என்பதும், மாற்றத்திறனாளியான அவரை, குடும்பத்தினர் கைவிட்டுவிட்டதால் தற்கொலை செய்து கொள்வதற்காக பஸ்சில் புதுச்சேரி கடற்கரைக்கு வந்தது தெரிய வந்தது.பின்னர், அவரை ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஜீப்பில் அழைத்து சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஐ.ஜி. அஜித்குமார் சிங்ளாவின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி