வசந்தம் சிட்டி மனைப்பிரிவு கிளியனுாரில் துவக்க விழா
வானுார், : புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், கிளியனுார் சந்திப்பில் வசந்தம் சிட்டியின் புதிய மனைப்பிரிவு துவக்க விழா நடந்தது.திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா, கவுன்சிலர் ரவிச்சந்திரன், கிளியனுார் ஊாட்சி தலைவர் நாகம்மாள், வேலு, கவுன்சிலர் ஏழுமலை, வெங்கடேசன், காமராஜ் ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.விழாவில், திண்டிவனம் தொழிலதிபர் பங்கஜ், வசந்தம் பிரமோட்டார்ஸ் உரிமையாளர் பாஸ்கர் தலைமை தாங்கி, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர்.இது குறித்து உரிமையாளர் பாஸ்கர் கூறுகையில், 'கிளியனுாரில் அமைந்துள்ள இந்த புதிய மனைப்பிரிவில், 100க்கும் மேற்பட்ட மனைகள் அமைந்துள்ளன. டி.டி.சி.பி அரசு அங்கீகாரம் பெற்ற மனைப்பிரிவுகளாகும். உடனடியாக வீடு கட்டி குடியேறும் வகையில், மனைகளில் சிறந்த சிமென்ட் சாலை வசதி, மின் விளக்கு வசதி, சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மனைகளை சுற்றிலும், சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.தனியார் வங்கி மூலம் கடன் பெற்று தரப்படும். இந்த மனைப்பிரிவில் இருந்து ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரிக்கு 15 நிமிடத்தில் பயணிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மனைப்பிரிவிலேயே அலுவலகம் அமைந்துள்ளது. அணுகி தெரிந்த கொள்ளலாம்' என்றார்.