மேலும் செய்திகள்
கடற்கரை சாலையில் விக்டல் சிலை
7 hour(s) ago
கொத்தனார் தற்கொலை: போலீசார் விசாரணை
12 hour(s) ago
ஊஞ்சல் உற்சவம்
12 hour(s) ago
வீட்டில் இருந்த 4 சவரன் செயின் திருட்டு :மைனர் பெண் கைது
13 hour(s) ago
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுாரில் சாலை அமைக்கும் பணியினை வைத்திலிங்கம் எம்.பி., துவக்கி வைத்தார்.நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், எம்.பி., நிதி 20 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பண்டசோழநல்லுார் ஏரிக்கரை தார்சாலை, மொளப்பாக்கம் யோகப்பிரியா நகருக்கு தார்சாலை அமைக்கப்பட உள்ளது.இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. காங்., மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., சாலை பணியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் அய்யப்பன், முத்தாலம்மன் கோவில் முன்னாள் அறங்காவலர் குழு நிர்வாகிகள் சதாசிவம், பிரபாகரன், காங்., மாநில செயலாளர் முத்துக்குமரசாமி, காங்., பிரமுகர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
7 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago