உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெத்தி செமினார் பள்ளியில் சுதந்திர தின விழா

பெத்தி செமினார் பள்ளியில் சுதந்திர தின விழா

புதுச்சேரி: பு துச்சேரி, மூலக்குளம் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து எஸ்.பி., செல்வம், இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் ஆனந்த் ஆகியோர் தேசியக்கொடி ஏற்றினர். பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் பேசுகையில், 'சுதந்திரம் என்பது ஒரு விலைமதிப்பற்ற பரிசு. இந்த நாளில் மாணவர்களாகிய நீங்கள் சுதந்திரத்திற்காகப் போராடிய வீரர்களையும், தியாகிகளையும் நினைவு கூறும் வகையில் இந்த நாளை கொண்டாட வேண்டும். இது நமது வரலாற்றையும், சுதந்திர போராட்டத்தையும் நினைவில் கொள்ள வேண்டிய நாள். மாணவர்களாகிய நீங்கள் நல்ல குடிமக்களாகவும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை அளிக்கக்கூடிய இளம் நாயகர்களாகவும் உருவாக வேண்டும்' என்றார். தொடர்ந்து 3ம் வகுப்பு மாணவர்களின் சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை