உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.எம்.வி., பள்ளியில் சுதந்திர தின  விழா 

எஸ்.எம்.வி., பள்ளியில் சுதந்திர தின  விழா 

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்கு ள விநாயகர் கல்வி அறக் கட்டளையின் எஸ்.எம்.வி., பள்ளியில் 79வது சுதந்திர தின விழா நடந்தது. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார். இணை செயலர் வேலாயுதம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை மாலை அணிவித்து, துாப தீப ஆராதனை நடந்தது. பின், மாணவிகளின் நடனம், பரதநாட்டியம், மேற்கத்திய நடனம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தன. விடுதலை போராட்ட வீரர்கள் மாறுவேடம் அணித்தும், விவசாயி, மருத்துவர், ரத்ததானம், கண் தானம், மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு போன்ற விழிப்புணர்வு ஆடை அலங்காரத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை