உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா

தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் பொறுப்பு பேராசிரியர் ஞானோ ப்ளாரன்ஸ் சுதா வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசு கல்வித் துறை செயலாளர் மற்றும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக புரோ சான்சலர் கிருஷ்ண மோகன் உப்பு பேசினார். தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் சர்வதேச இணைப்புப் பிரிவு இயக்குனர் விவேகானந்தன் பல்கலைக்கழக தின அறிக்கை வாசித்தார். தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ரொக்கப் பணம், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பூபாலன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி