உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி முத்தியால்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

 சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி முத்தியால்பேட்டையில் ஓட்டு சேகரிப்பு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளர் சந்துருஜி நேற்று சோலை நகர் வடக்கு பகுதியில் வீடு வீடாக சென்று காஸ் அடுப்பு சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், 'காஸ் அடுப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தின் அடிப்படை தேவையை குறிக்கும் சின்னம். இந்த சின்னத்திற்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்கும். முத்தியால்பேட்டை முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் அமைத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என, வாக்குறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !