மேலும் செய்திகள்
உழவர்கரை தொகுதியில் பிரபாதேவி வீரராகு பிரசாரம்
06-Apr-2026
புதுச்சேரி: உழவர்கரை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பிரபாதேவி வீரராகு தொகுதி முழுதும் காஸ் சிலிண்டர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு இறுதிகட்டமாக சூறாவளி பிரசாரம் செய்தார். திறந்த வேனில் பிரசாரத்தை துவக்கிய அவர், கவுண்டன்பாளையம் பகுதியில் துவங்கி செல்லபெருமாள்பேட்டைபகுதியில் முடித்தார். அவருடன் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவாளர்கள் புடைசூழ, பிரபாதேவி வீரராகு, 'காஸ் சிலிண்டர்' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் தொகுதியின் அடிப்படை வசதிகளை சீரமைப்பதே தனது முதன்மை நோக்கம் என, அவர், பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார்.
06-Apr-2026