உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுயேச்சை எம்.எல்.ஏ., அப்போலோவில் அனுமதி

சுயேச்சை எம்.எல்.ஏ., அப்போலோவில் அனுமதி

புதுச்சேரி: ரெட்டியார்பாளையம் சுயேச்சை எம்.எல்.ஏ., நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரெட்டியார்பாளையம் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கரன். இவருக்கு கடந்த 19ம் தேதி உடல் நலக்குறை ஏற்பட்டு, மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவரை குடும்பத்தினர், சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ