இந்திய கடலோர காவல்படை மினி மாரத்தான் போட்டி
காரைக்கால்: காரைக்காலில் இந்திய கடலோரக் காவல்படையின் 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில், இந்திய கடலோரக் காவல்படை சார்பில், 50ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நிரவி பகுதியில் உள்ள இந்திய கடலோர காவல்படை அலுவலகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் மூன்று பிரிவுகளில் 21, 10, 5, கிலோ மீட்டார் துாரங்களுக்கு மாரத்தான் பேட்டி நடந்தது. போட்டியை கடலோர காவல்படை அதிகாரிகள் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதில், கல்லுாரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.