உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூ., மனு

அடிப்படை வசதிகள் கோரி இந்திய கம்யூ., மனு

பாகூர்: குடியிருப்புபாளையம் கிராமத்தில் தார் சாலை, கழிவு நீர் வாய்க்கால் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்திட வேண்டும் என இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இது குறித்து இந்திய கம்யூ., தொகுதி செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவத்திடம் அளித்துள்ள மனு;ஏம்பலம் தொகுதி, குடியிருப்புபாளையம் சுப்பையா நகர் முதல் பின்னாச்சிக்குப்பம் வரையிலான இணைப்புச் சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, இந்த சாலை ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறி விட்டது.அந்த வழியாகபஸ்கள் செல்வது கிடையாது. குடியிருப்புபாளையத்தில் பாழடைந்துள்ள கழிவு நீர் வாய்க்காலில் நீரோட்டம் தடைப்பட்டுள்ளதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே, புதியதாக தார் சாலை, கழிவு நீர் வாய்க்காலை அமைக்க வேண்டும். சுப்பையா நகரில் இடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை மீண்டும் கட்ட வேண்டும். நடவடிக்கை இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை