உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திய மருத்துவ சங்கத்தின் தொடர் மருத்துவ கருத்தரங்கம்

இந்திய மருத்துவ சங்கத்தின் தொடர் மருத்துவ கருத்தரங்கம்

புதுச்சேரி: அறுவை சிகிச்சையில் ரோபோடிக்ஸ் பங்களிப்பு குறித்த தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது. இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை, சென்னை அப்போலோ மருத்துவமனை சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கம், ரெசிடென்சி டவரில் நேற்று நடந்தது.சிறப்பு அமர்வுகளில், காது, மூக்கு, தொண்டை, தலை, கழுத்து அறுவை சிகிச்சையில் ரோபோடிக்ஸ் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனை ரோபோடிக் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை பிரிவு தலைவர் வெங்கடகார்த்திகேயன், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்வு ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா, ரத்த புற்றுநோய் நிபுணர் பிரபு ஆகியோர் பேசினர். டாக்டர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். இக்கருத்தரங்கில், இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர், செயலாளர் சீனிவாசன், பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் கலந்து கொண் டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ