உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இந்திய வானொலி ஆண்டு விழா நாளை பரிசளிப்பு

 இந்திய வானொலி ஆண்டு விழா நாளை பரிசளிப்பு

புதுச்சேரி: அகில இந்திய வானொலியின் 90வது ஆண்டையொட்டி, போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு நாளை (6ம் தேதி) பரிசளிப்பு விழா நடக்கிறது. இவ்விழாவையொட்டி, இளைஞர் களை சந்திப்போம் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அரங்கில் நாளை (6ம் தேதி) நடக்கிறது. முன்னதாக, வானொலி மூலம் மக்களுக்கு ஆற்றி வரும் சேவைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இன்று (5ம் தேதி) காலை 7:00 மணிக்கு, கடற்கரை சாலையில் இருந்து அஜந்தா சிக்னல் சந்திப்பு வரை நடைபயணம் மேற்கொள்ளப் படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை