50 சதவீத இடங்களை பெற வலியுறுத்தல்
புதுச்சேரி: மாணவர்கள், பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் அறிக்கை:புதுச்சேரியில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளில் 50 சதவீத மருத்துவ இடங்களை பெறுவது தொடர்பாக அரசு மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், 2021ம் ஆண்டு புதியதாக அமைந்த முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு, 50 சதவீத ஒதுக்கீடு பெறுவது தொடர் பான கோப்பை கவர்னர் தமிழிசை மூலம் திரும்ப பெற்றது.இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் 3 தனியார் மருத்துவ கல்லுாரி களில் 50 சதவீத அரசு ஒதுக்கீடு இடங்களை பெறுவது தொடர்பாக புதுச்சேரி அரசுக்கு விளக்கம் கேட்டு கோப்பு அனுப்பி உள்ளது. ஆகையால், புதுச்சேரி அரசு மாநிலத்தில் உள்ள 3 தனியார் மருத்துவ கல்லுாரிகளிடமிருந்து மருத்துவ இடங்களை பெற்றிட, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி, 650 இடங்களில் 325 இடங்களை பெறுவதற்கு, கவர்னர், முதல்வர், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.